பாராளுமன்றத்தில் ஒழுங்குப் பிரேரனையை சரியாகப் பிரயோகித்தல் மற்றும் து~Êபிரயோகித்தல்
by manthri.lk - Research Team posted about 10 years ago in ஆய்வறிக்கை
ஒழுங்குப் பிரேரணை என்பது பாராளுமன்ற செயற்பாடுகளில் ஒரு முக்கிய அம்சமாகும். பாராளுமன்றத்தில் உள்ள சகல உறுப்பினர்களுக்கும் ஒழுங்குப் பிரேரனையை எழுப்பும் உரிமை உண்டு. இதன் நோக்கம் பாராளுமன்றத்தில் ஏற்கப்பட்டுள்ள ஒரு நடைமுறை மீறப்படுவதை சபையின் கவனத்திற்குக் கொண்டு வருவதாகும். இதே வேளை, இதை எழுப்பும் உரிமையை து~;பிரயோகம் செய்யவும் முடியும். அதாவது ஒரு பாராளுமன்ற நடைமுறை மீறப்படாத நிலையில் அது மீறப்பட்டுள்ளதாக தவறாகக் கூறிய வண்ணம் ஒழுங்குப் பிரேரனை ஒன்றை எழுப்புவது, இந்த உரிமையை தவறாகப் பயன்படுத்துவதாகும். இதன் மூலம் பாராளுமன்றதின் செயற்பாடுகளுக்கு இடைêறு ஏற்படுகின்றது அல்லது ஏற்படுத்தப்படுகின்றது.
சரியான விதத்தில் ஒழுங்குப் பிரேரனை ஒன்றை எழுப்புவதற்கு பாராளுமன்ற செயற்பாடுகளுக்கு கவனமாக செவிமடுப்பது மற்றும் சபையின் நடைமுறை விதிகள் பற்றிய தெளிவு இருப்பது அவசியமாகும். இதன் மூலம், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சபையின் செயற்பாடுகள் விடயத்தில் கவனத்துடன் இருக்கின்றாரா மற்றும் அவர்களுடைய பங்களிப்பு மனப்புர்வமானது தானா போன்ற விடயங்கள் தெரிய வருகின்றன.
ஒழுங்குப் பிரேரனை எழுப்பப்படும் சந்தர்ப்பங்களில் பாராளுமன்றம் பாதிக்கு மேல் விழித்திருப்பதில்லை
பாராளுமன்றத்தில் உள்ளவர்களின் செயற்பாடுகளை அவதானித்து, அவர்களை தரவரிசைப் படுத்தி வரும் முன்னோடி இணையத்தள முன்னெடுப்பொன்றாகிய Manthri.lk
2012 மே முதல் 2014 ஆகஸ்டு வரையான 28 மாத காலத்தில் நடைபெற்ற 206 சபை அமர்வுகளின் போது சேகரித்த தரவுகளின் படி, ஒரு சபை அமர்விற்கு 6 ஒழுங்குப் பிரேரனைகள் வீதம் எழுப்பப்பட்டன என்பது தெரிய வந்துள்ளது. இதன்படி, எழுப்பட்ட மொத்த ஒழுங்குப் பிரேரனைகளின் எண்ணிக்கை
1222 ஆகும். இதே வேளை, கிட்டத்தட்ட பாதி பாராளுமன்ற உறுப்பினர்கள் (49%) மேற்குறிப்பிட்ட 206 அமர்வுகளில் ஒரு ஒழுங்குப் பிரேரனையைக் கூட எழுப்பவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
விழித்திருந்தவாறு பாராளுமன்ற செயற்பாடுகளுக்கு இடைய10று ஏற்படுத்துவதை விட உறங்குவது சிறந்ததா?
பாராளுமன்றத்தில் உள்ள பாதி உறுப்பினர்கள் ஒழுங்குப் பிரேரனைகளின் போது விழித்திருக்கவில்லை என்பதன் மூலம் எஞ்சிய மறு பாதியின் நடத்தை ஏற்புடையது என்பது கருத்தல்ல. உண்மையைக் கூறுமிடத்து, ஒழுங்குப் பிரேரனைகளை எழுப்பும் பாதி உறுப்பினர்கள், அந்த உரிமையை து~;பிரயோகம் செய்வதன்பால் அதிகம் சாய்பவர்களாகவே இருந்தனர். அதாவது, ஒழுங்குப் பிரேரணை ஒன்றை எழுப்புவதன் மூலம் ஒரு அத்துமீறைலை சுட்டிக்காட்டுவதை விட அதன் மூலம் சபையின் செயற்பாடுகளுக்கு இடைய10று ஏற்படுத்த முயற்சிப்பவர்களாகவே இருந்தனர். இது தொடர்பாக மேற்கொள்ளபட்ட அவதானிப்பின் போது மேற்குறிப்பிட்ட கால எல்லைக்குள் எழுப்பப்பட்ட ஒழுங்குப் பிரேரனைகளில் 47% மட்டுமே அசலான நோக்கத்திற்கு எழுப்பப்பட்டதுடன் 53% தருணங்களில் அது து~;பிரயோகமே செய்யப்பட்டமை புலனாகியது. இதை அட்டவணை 1 தெளிவாக எடுத்தக் காட்டுகின்றது.
ஒழுங்குப் பிரேரனையை பிரயோகித்தல் மற்றும் து~;பிரயோகித்தலில் சாதனை படைத்தோர்
சரியாக பிரயோகித்தவர்கள்: குறைந்த பட்சம் 15 ஒழுங்குப் பிரேரனைகளை எழுப்பிய 20 பாராளுமன்ற
உறுப்பினர்களை
Manthri.lk பட்டியலிட்டுள்ளது. இவர்களுள், சதவித அடிப்படையில் அதி கூடிய தடவைகள் அரசாங்கத்தின் பிரதம கொரடா தினே~; குணவர்தன 86% ஒழுங்குப் பிரேரனை உரிமையை சரியாகப் பயன் படுத்தியுள்ளமை தெரிய வந்தது. (அட்டவணை 2) அடுத்தபடியாக முறையே எம். ஏ. சுமந்திரன் (86%) மற்றும் ஜோன் அமரதுங்க (79%) இருவரும் உள்ளனர்.
து~;பிரயோகம் செய்தோர்: மேற்படி 20 பாராளுமன்ற உறுப்பினர்களில் சதவீத அடிப்படையில் மர்வின் சில்வாவே அதி கூடிய தடவைகள் ஒழுங்குப் பிரேரனை உரிமையை து~;பிரயோகம் செய்தவராக காணப்பட்டார். (அட்டவணை 2) அமைச்சர்
சில்வாவின் முக்கால்வாசி (78%) ஒழுங்குப் பிரேரனை எழுப்புதல்கள், அந்த உரிமையை து~;பிரயோகம் செய்தவையாகவே அமைந்திருந்தன. இவருக்கு அடுத்தபடியாக, இவ்வுரிமையை து~;பிரயோகம் செய்தவர்களாக முறையே சுஜீவ சேனசிங்ஹ (77%) மற்றும் லக்~;மன் கிரிஎல்ல (67%) இருவரும் இருக்கின்றனர்.
ஒழுங்குப் பிரேரனை
சரியாகவும் தவறாகவும் பிரயோகிப்பதில் கிண்ணஸ் சாதனைப் படைத்தவர்
அதி கூடிய
தடவைகள் ஒழுங்குப் பிரேரனை
உரிமையைப் பயன்படுத்திய சாதனையை
ஒரு பாராளுமன்ற உறுப்பினர்
ஏற்படுத்தியுள்ளார். அதாவது நாம்
மேலே குறிப்பிட்ட கால
எல்லைக்குள் மேற்கொள்ளபட்ட மொத்த
ஒழுங்குப் பிரேரனைகள் எண்ணிக்கையாகிய 1222 இல் 326 பிரேரணைகளை ஒரே
ஒரு உறுப்பினர் தனியாக
மேற்கொண்டுள்ளார். அவர்தான் ஏ.
எச். எம். அஸ்வர்!
அடுத்தபடியாக அதி கூடிய
தடவைகள், அதாவது 78 தடவைகள், ஒழுங்குப் பிரேரனை
எழுப்பியவராக ரவி கருனாநாயக
பதிவாகியுள்ளார். இதில் கவனிக்க
வேண்டிய விடயம் என்னவென்றால், இரண்டாவது
இடத்தில் உள்ள ரவி
கருனாநாயகவை போல நான்கு
மடங்கு தடவைகள் முதலாம்
இடத்தில் உள்ள அஸ்வர்
எழுப்பியுள்ளார் என்பதே!
ஒட்டுமொத்தமாக பார்க்கும்
போது ஒழுங்குப் பிரேரணையை
சரியாக 138 (42%) தடவைகளும் தவறாக
188 (58%) தடவைகளும் பயன்
படுத்தியதன் மூலம் இருவித
சாதனைகளுளையு ஏ. எச்.
எம். அஸ்வரே தனி
நபராக ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆக, மொத்த எண்ணிக்கையில் அஸ்வர் 24% வீதம்
தடவைகள் ஒழுங்குப் பிரேரணையை
சரியாக படுத்தியுள்ளதோடு, 29% தடவைகள்
அதை து~Ëபிரயோகம் செய்துள்ளார்.
ஆயவொசi.டம
வின் தரவுகளை நோக்கும்
போது ஒழுங்குப் பிரேரனை
வரப்பிரசாதத்தை து~;பிரயோகம் செய்வதன் மூலம்
சில பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையின் செயற்பாடுகளுக்கு பாரிய
இடைêறை ஏற்படுத்துவது புலனாகியுள்ளது. இது போன்ற இடைய10றுகளில் இருந்து நமது
பாராளுமன்றத்தை எவ்வாறு பாதுகாக்கலாம்? இந்த பிரச்சினைக்கு தீர்வு
காணும் பொறுப்பை யார்
ஏற்க வேண்டும்? உங்கள்
கருத்துக்களை www.manthri.lk/en/blog என்ற இணையப்பக்கத்திற்கு அனுப்புவதன் மூலமோ, அல்லது 071-4639882 என்ற இலக்கத்திற்கு குறுஞ்செய்தியொன்றை அனுப்புவதன் மூலமோ
Manthri.lk வுடன் பகிர்ந்து
கொள்ளலாமே?
comments powered by Disqus