அளுத்கம சம்பவத்திற்குப் பின் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் எதிர்ப்பு தெரிவித்தனரா?
by manthri.lk - Research Team posted over 10 years ago in ஆய்வறிக்கை
பாராளுமன்றத்தில் அரசு தனக்குத் தேவையான ஒரு விடயத்தை வாக்ககெடுப்பிற்காக முன்வைக்கும் போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதங்கள் 3 உள்ளன. இவைகளில் தமக்கு விருப்பமான ஒரு முறைமையை தெரிவிக்கப்படும் எதிர்ப்பின் அளவைப் பொறுத்து உறுபபினாகளால் தெரிவு செய்யப்படும். மிகவும் பலமான எதிர்ப்பு குறிப்பிட்ட அந்த விடயத்திற்கு எதிராக வாக்களிப்பதாகும். இரண்டாவது வகை பாராளுமன்றத்தில் இருந்து கொண்டே வாக்களிப்பில் ஈடுபடாமல் இருப்பதாகும். மூன்றாவதும் மிகவும் பலவீன்மான எதிர்ப்பு முறையும், பாராளுமன்றத்திற்கே வேண்டுமென்றே வராமல் இருப்பதாகும். கடந்த ஜுன் 18 ‘ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் மூலம் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படவுள்ள விசாரனை நடைபெறக் கூடாது’ என்ற விடயம் வாக்கெடுப்பிற்கு முன்வைக்கப்பட்டது. இவ்வாக்கெடுப்பானது அளுத்கம மற்றும் பேருவள பிரதேசங்களில் வசிக்கும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக காடையர்கள் மேற்கொண்ட வன்முறைகளுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகே முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நடந்த அக்கிரமங்கள் தொடர்பாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது விசனத்தை அரசாங்கத்திற்குத் தெரிவித்தும் இருந்தார்கள். இந்த நிலையில் மேற்படி வாக்கெடுப்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எப்படி நடந்து கொண்டார்கள்? பாராளுமன்றத்தில் உள்ள முஸ்லிம் உறுப்பினர்கள்: பாராளுமன்றததில் 18 முஸ்லிம் உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். அதில் 16 பேர் ஆளும் கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியைச் சேர்ந்தவர்கள் ஆவதுடன் அதில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்தவர்கள் 8 பேரும். அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்தவர்கள் இருவரும். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்கள் 5 பேரும் ஐக்கிய தேசிய கட்சியை விட்டு அரசிற்குத் தாவியவர் ஒருவரும் உட்படுவர். ஏனைய இருவரும் ஐக்கிய தேசிய முன்னணியைச் செர்ந்தவர்கள் ஆவர். பாராளுமன்றத்தின் மற்றும் அதன் உறுப்பினர்களின் செயற்பாடுகளை பகுப்பாய்வு செய்து வரும் Manthri.lk குழு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மேற்படி வாக்கெடுப்பில் எவ்வாறு செயற்பட்டார்கள் என்பதை அவதானித்ததில் ஐவர் அரசிற்கு ஆதரவாகவும், ஏனையோர் பாராளுமன்றத்திற்கு வராமல் இருந்தோ அல்லது வாக்கெடுப்பில் பங்கேற்காமலோ இருந்தமை புலனாகியது. ஆனால் ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட எதிராக வாக்களிக்கவில்லை. முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்தனரா? ஐதேக: இக்கட்சியில் இருந்து தாவிய அப்துல் காதர் அரசிற்கு ஆதரவாக வாக்களித்தார். ஸ்ரீசுக: ஐந்து ஸ்ரீசுக உறுப்பினர்களில் நால்வர் அரசிற்கு ஆதரவாக வாக்களித்தனர். ஒருவர் மிகவும் பலவீனமான எதிர்ப்பு முறையான பாராளுமன்றத்திற்கு வராமல் இருப்பதை மேற்கொண்டார். ஸ்ரீசுமுக: இக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் அதிகமானோர் சபைக்கு வராமல் இருந்து வாக்களிப்பை தவிர்த்தக் கொள்வதன் மூலம் அளுத்கம சம்பவத்திற்கான தமது எதிர்ப்பை தெரிவித்துக் கொண்டனர். ஆனால் முஹம்மத் அஸ்லம் மாத்திரம் பாராளுமன்றத்திற்கு வந்து வாக்கெடுப்பில் ஈடுபடாமல் இருந்து எதிர்ப்பை தெரிவித்துக் கொண்டார். அஇமுகா: இக்கட்சியயை சேர்ந்த இருவரும் பாராளுமன்றத்திற்கு வராமல் இருந்து எதிர்ப்பை தெரிவித்தனர். ஐதேக: இக்கட்சியின் இரு உறுப்பினர்களும் சபையில் இருந்தபடியே வாக்களிப்பில் கலந்து கொள்ளாத முறைமையை பின்பற்றினர். இதனடிப்படையில் எந்த ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரும் சபையில் இருந்து அரசிற்கு எதிர்ப்பாக வாக்களிக்கும் மிக பலமான எதிர்ப்பை காட்டவில்லை. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்த்து வாக்களித்து பலமான எதிர்ப்பை தெரிவித்தது.
ஒட்டுமொத்த முஸ்லிம் எதிர்ப்பு: எவ்வாறிருந்த போதிலும் மேற்படி பிரேரனை தொடர்பாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் காட்டிய ஒட்டுமொத்த எதிர்ப்பு முஸ்லிம் அல்லாத உறுப்பினர்கள் காட்டிய ஒட்டுமொத்த எதிர்ப்பை விட மிக அதிகமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. ஸ்ரீPசுக முஸ்லிம் உறுப்பினர்கள் 20% எதிர்ப்பு தெரிவித்ததோடு முஸ்லிம் அல்லாத உறுப்பினர்கள் 4% மட்டுமே எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதே வேளை அரச கூட்டணியில் இருக்கும் முஸ்லிம் உறுப்பினர்களில் 82% எதிர்ப்பு தெரிவித்ததோடு, முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களட 8% மட்டுமே எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். (அட்டவணை 2 பார்க்க)
வாக்களிப்பு
வடிவம் உங்களை வியப்பிற்கு உற்படுத்தியுள்ளதா?
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை அரசாங்கம் இழந்துள்ளதா?
உங்கள்
கருத்துக்களை 0714639882 இலக்கத்திற்கு குறுந்செய்தியாக அனுப்பி வையுங்கள். அல்லது
கயஉநடிழழம.உழஅஃஆயவொசடைம. பக்கத்தில் அதை பதிவு செய்யுங்கள்.
பிரேரணை
மீது மேற்கொள்ளப்பட்ட வாக்களிப்பு பற்றிய மேலதிக விபரங்களுக்கு
இங்கே
கிளிக் செய்க.
comments powered by Disqus