பாராளுமன்றத்தில் புதிய உறுப்பினர்கள்; எதிர் தரப்பில் திறம்பட செயல்படுகின்றனர்

by Manthri.lk - Research Team posted over 10 years ago in ஆய்வறிக்கை

 

இலங்கையின் தற்போதைய பாராளுமன்றத்தில் இருக்கும் 225 உறுப்பினர்களுள் சுமார் 88 பேர்வரை (38மூ)  புதுமுகங்களாகும். அதாவதுஇ அவர்கள் பாராளுமன்னத்திற்கு முதல் முறையாக வந்த உறுப்பினர்களாகும். தற்போது கேள்வி என்னவெனில்இ அவர்கள் யாருக்காக செயற்படுகின்றனர்இ எவ்வாறு செயற்படுகின்றனர் என்பதேயாகும். 

பெரும்பாலான புதிய உறுபிபினர்கள் ஐமசுமு க்காக செயற்படுகின்றனர்: புதுமுகங்களுள் ஏறத்தாழ  நான்கில் மூன்று பங்கினர்இ 62 பேர் ஐமசுமு யின் பக்கமாக  அமர்ந்துள்ளனர்.
20  பா.உ. கள் ஐதேமு யிலும்இ 4 பேர் ததேகூ பிலும் ஒருவர் ஜதேமு யிலும் உள்ளனர்.

ஐதேமு அணியினர் ஏனையவர்களைவிட ஒருபடி மேலாகச் செயல்படுகின்றனர்;:  வழக்கமாக நன்கு பிரதிநிதித்துவப்படுத்தப்படும் குழுக்கள் பெறுபேறுகளை தமக்குச் சாதகமாக்கிக்கொள்ளலாம். எனினும்இ பாராளுமன்றத்ததில் நடைபெறும் அதை;துச் செயற்பாடுகளையும்  அதில் பங்கேற்பவர்களையும் கண்காணித்து தரவரிசைப்படுத்தும் ஒரு முன்னோடி  இணையத்தள மேடையாகிய ஆயவொசi.டம யின்படிஇ  புது முகங்களாகத் திகழ்பவர்கள்  எண்ணிககையில் அதிகமாகவிருந்தும்இ பாராளுமன்றத்தில் தடம்பதிப்பதில் வெற்றிபெறவில்லை. 2012 மே மாதம் முதல் 2014 பெப்ரவரி வரையான 22 மாதங்களுக்கான
ஆயவொசi.டம யின் தரவுகள்இ ஐதேமு புதுமுகங்கள் ஐமசுமு புதுமுகங்களின் எண்ணிக்கையின் மூன்றில் ஒரு பங்கினராகவிருந்துமஇ; அவர்கள் ஐமசுமு புதுமுகங்களைவிட 20மூ அதிகமாகப் பங்களிப்புச் செய்துள்ளனர் என்பதைக் காட்டுகிறது.

அதனை இன்னொரு வகையில் கூறுவதாயின்இ ஐதேமு புதுமுகங்களின் சாராசரிப் பங்களிப்பு    ஐமசுமு புதுமுகங்களின் பங்களிப்பைவிட ஏறத்தாழ நான்கு மடங்காக இருந்துள்ளது. ததேகூ புதுமுகங்கள்கூட ஐமசுமு புதுமுகங்களின் சராசரி பங்களிப்பைவிட இரண்டு மடங்கு அதிக பங்களிப்பைச் செய்துள்ளனர்.ஜதேமு யின் புதுமுகம் மிக அரிதாகவே பங்களிப்புச் செய்துள்ளார்.



                                       

எதிர்தரப்பில் திறம்படச் செயற்படுபவர்கள்: முதல் பத்து புதுமுகங்களில் முதல் ஐந்து புதுமுகங்களும் ஐதேமு யைச் சார்ந்தவர்களாவர். பாராளுமன்றத்தில் ஆக்கபூர்வமாக 9 ஆயிரம் நிமிடங்களுக்கு மேல் உரையாற்றி புத்திக பத்திரண இப்பட்டியலில் முன்னிலை வகிக்க,  அதனையடுத்து அஜித் பெரேரா, சுஜீவ சேமசிங்க, ஹர்ஷா டீ சில்வா மற்றும் ஏரான் விக்கிரமசிங்க ஆகியோர் வருகின்றனர். .



                                                            


ஐமசுமு யின் புதிய பா.உ.களின் செயலாற்றுகை இதற்கு மாறானதாக உள்ளது. பாராளுமன்றத்தில் மிக மோசமாக செயற்படும் 10 பா.உ. களில் 9 பேர் ஐமசுமு யைச் சார்ந்தவர்களாகும்.

புது முகங்களுக்கான வாய்ப்புகள்:  88 புதிய பா.உ.களுள் 13 பேர் தொடர்ந்து வரும் சராசரி பா.உ. களைவிடச் சிறப்பாகச் செயற்பட்டுள்ளனர். எனவே, சிரேஷ்ட உறுப்பினர்களோடு ஒப்பிடுகையில், புதிய உறுப்பினர்களுக்கு அவர்களுடைய கட்சி முதற்கோலாசானினால் குறைந்த முன்னுரிமையே வழங்கப்படலாமெனினும், இப் புதிய உறுப்பினர்கள் நிச்சயம் பாராளுமன்றத்தில் வெற்றி பெறுவார்கள்.

புது முகங்கள் எவ்வாறு பங்களிப்புச் செய்கிறார்கள்? வெற்றிபெறும் புதிய பா.உ. கள் வாய்ப்புகளை தாங்களாகவே ஏற்படுத்திக் கொள்வதன்மூலம்; அதனைச் செய்கிறார்கள். கட்சி முதற்கோலாகசானினால்  வழமையாக கட்டப்படுத்தப்படாத  ஒத்தி வைப்புப் பிரேரணைகள், எழுத்துமூல வினாக்கள், ஒழுங்குப் பிரச்சனைகள் மற்றும்  மனுக்கள்  ஆகியவற்றில்  அவர்கள் அதிகளவு பங்களிப்புச் செய்கின்றனர். சட்டமூலங்களை விவாதித்தல் முதலிய கட்சி முதற்கோலாசினில் தங்கியிருக்கும்  விடயப் பரப்புகளிலும்கூட புதிய பா.உ. கள் அதிகளவு பங்களிப்பு செய்கின்றனர்.  


                                     

Bellow box are the translations of words on the above chart


                                    

புதிய ஐதேமு பா.உ. களின் அதிகளவு பங்களிப்பிற்கான காரணம் என்ன?  ஏனையவர்களைக் காட்டிலும் ஐதேமு யிலுள்ள புதிய உறுப்பினர்கள் உயர்ந்த தரத்திலானவர்களா? அல்லது, ஐதேமு தனது புதிய பா.உ.களுக்கு  அதிக வாய்ப்புகளை வழங்குவதில் சிறப்பானதாக உள்ளதா? அரசாங்கத் தரப்பிலுள்ள புதிய பா.உ. ஏன் இத்தகைய குறைந்த மட்ட செயற்பாடுகளைக் கொண்டிருக்கிறார்களென நீங்கள் கருதுகிறீர்கள?; உங்கள் கருத்துகளை Manthri.lk யின் www.manthri.lk/en/blog மூலம்; அல்லது 071-4639882  எனும் இலக்கத்திற்கு குறுஞ் செய்தி அனுப்புவதன் மூலம் பகிர்ந்து கொள்ளுங்கள்.  











 


comments powered by Disqus