பெரும் சுமையை தாங்குதல்: அரசாங்கத்தின் பிரதம கொறடா
by manthri.lk - Research Team posted about 10 years ago in ஆய்வறிக்கை
அரசாங்கத்தின் அமைச்சர்கள் பாராளுமன்றத்திற்கு தரும்; தகவல்களை உறுதி செய்து அவர்களுடைய செயல்களுக்கு அவர்களை பொறுப்பாளிகளாக்குவதற்கு வகை செய்யும் ‘எழுதப்பட்ட கேள்விகள்’ என்ற முறைமை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு முக்கிய விடயமாகும். இதன் காரணமாக அமைச்சர்கள் சிறந்த முறையில் தயாராக இருத்தல் அவசியமாகும்.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த ‘எழுதப்பட்ட கேள்விகளில்’ சுமார் ஐந்தில் ஒன்றிட்கு பதில் அளிக்கும் வேளையை 12 மாத ஆய்வுக் காலத்திற்குள் பாராளுமன்றத்தில் ஒரே நபரே செய்து வந்தார் என்ற விடயத்தை பாராளுமன்றத் தரவுகளை சிறப்பான விதத்தில் கையாண்டு வரும் Manthri.lk கண்டு பிடித்துள்ளது. அந்த நபர் வேறு யாருமல்ல அரசாங்கத்தின் பிரதம கொறடாவான தினே~; குணவர்தன அவர்களே ஆவார்.
சுமை தாங்கி: 2013 செப்டெம்பர் முதல் 2014 ஆகஸ்டு வரையிலான 12 மாத காலத்திற்குள், 66 அமைச்சர்களில் 47 பேரும்,
39 பிரதி அமைச்சர்களில் 24 பெரும் குறைந்த பட்சம் ஒரு எழுதப்பட்ட கேள்விக்கு பதில் அளித்தள்ளார்கள். இதே வேளை, எழுதப்பட்ட கேள்விகளில் 19% இட்கு பதில் தினே~; குணவர்தன அவர்களே அளித்துள்ளார். (வரைபு 1)
எழுதப்பட்ட கேள்விகளை கையளித்தல்: இது தொடர்பாக சில அமைச்சர்கள் குறிப்பிடுமளவு செயற்பட்டுள்ளமையை தரவுகள் காட்டுகின்றன. தினே~;;; குணவர்தன பதில்
அளித்த மொத்த கேள்விகள் எண்ணிக்கையான 141 இல், 14 கேள்விகள் (10%) மட்டுமே நீர் பாசனம் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் என்ற அடிப்படையில் அவருடைய பாராளுமன்றக் கடமையுடன் தொடர்பானவையாக இருந்தன என்பது இங்கு கவனிக்கப்பட வெண்டிய விடயமாகும். அது தவிர அமைச்சர் என்ற ரீதியில் அவர் தொடர்பற்ற அமைச்சுக்கள் தொடர்பாக எழுப்பப்ட்ட எஞ்சிய 90% கேள்விகளுக்கு அவரே பதில் அளிக்கும் நிலை ஏற்பட்டமைக்குக் காரணம், அந்த கேள்விகள் தொடர்பான அமைச்சர்கள் பாராளுமன்றத்தில் சமூகம் அளித்திருக்காமையே என்பது குறிப்பிடத்தக்கது. (வரைவு 2)
சுகலகலா வல்லவன்: எழுதப்பட்ட கேள்விகளுக்கு பதில் தரும் பொறுப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். குறிப்பாக, தகவல் பெரும் உரிமைக்கான சட்டம் நம் நாட்டில் இல்லாத நிலையில், இந்தக் கேள்விகளுக்காக அரசு தரும் பதில்கள் பல வேளை விசாரனைக்கு உட்படுத்த முடியாத விளக்கங்களையே வெளிப்படுத்தும். இந்தத நிலையில் அரசின் பிரதம கொறடா, தனக்கு பரிட்ச்சயமற்ற அமைச்சுக்கள் தொடர்பாக குறிப்பிட்ட அந்த அமைச்சுக்களின் அமைச்சர்கள் கேட்கப் படும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதற்கு சபையில் இல்லாத நிலையில்- பதில்களை அளிக்கும் போதே மட்டுப்பட்ட அறிவுடன் அவற்றிட்கு பதில் சொல்லும் நிலையிலே அவர் இருப்பார் என்பதை மறுப்பதற்கில்லை. கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்களை மிக ஆளமான விளக்கத்துடன் எதிர்பார்க்கப்படும் தருணங்களில் இந்த நிலை மிக கேள்விக்குரியதாகவே ஆவதுண்டு.
குறிப்பாக, பாதுகாப்பு தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போது அது ஒரு பொறுப்பு மிகுந்த பணியாகின்றது. பாதுகாப்பு அமைச்சருமான ஜனாதிபதியவர்கள் பொதுவாக பாராளுமன்ற நிரல்களுக்கு சமூகம் அளிப்பதில்லை என்பதாலும், பாதுகாப்பிற்காக பிரதி அமைச்சர் ஒருவர் கிடையாது என்பதாலும் இதற்காக பதில் தரும் பிரதம கொறடாவின் பொறுப்பு ஒரு பாரதூரமான கடமையாகின்றது. ஆனால், அமைச்சரும் பிரதி அமைச்சரும் நியமிக்கப்பட்டிருக்கும் ஏனைய அமைச்சுக்கள் தொடர்பில் எழுப்பப்படும் கேள்விகள் பொதுவாக முக்கியத்துவத்தால் பாதுகாப்பு விடயம் போன்று இருப்பதில்லை.
இதே வேளை, தமது அமைச்சுக்கள் தொடர்பான பொறுப்புக்களில் இருந்து ஒதுங்க முற்படாதவர்களும் அமைச்சர்களில் இருக்கத்தான் செய்கின்றனர். சுகாதார பிரதி அமைச்சர் லலித் திஸ்ஸநாயக்க இதில் குறிப்பிடத்தக்கவர் ஆவார். 12 மாத காலத்திற்குள் இவரை நோக்கித் தொடுக்கப்ட்ட 37
எழுதப்பட்ட கேள்விகளில் 28
இட்கு இவரே பதில் அளித்தார் என்பது மெச்சத்தக்கதே. இது வீதாசார அடிப்படையில் 76% ஆகும்.
இதற்கு முன், மலையளவு எழுதப்பட்ட கேள்விகளை தொடுப்பதன் மூலம் இந்த முறைமையில் உள்ள கோளாறை பயன் படுத்த முற்பட்ட எதிர்கட்சிகளை சேர்ந்த ‘வீரர்கள்’ பலரை பற்றி
Manthri.lk வெளிச்சம் போட்டுக் காட்டியது. இக்கேள்விகளுக்கான பதில் கூறுவதற்காக அரசாங்கத்தின் பிரதம கொறடா மீது அசாத்தியமான விதத்தில் சார வேண்டியுள்ளமையானது, எழுதப்பட்ட கேள்விகளுக்கு தரும்
பதில்களுக்காக அரசை பொறுப்புக் கூற வைப்பதை கேள்விக் குறியாக்கும் முக்கியமானதொரு அம்சமாகும்.
comments powered by Disqus