பாராளுமன்றத்தில் பெண்களின் பங்களிப்பு: சராசரியாக ஆண் உறுப்பினர்களை விட 60 %குறைவு

by Manthri.lk - Research Team Team posted about 10 years ago in ஆய்வறிக்கை

 

உலகின் முதல் பெண் பிரதம மந்திரி இலங்கையர் ஒருவரே. அது மட்டுமின்றி நிறைவேற்று அதிகாரமுள்ள ஒரு பெண் ஜனாதிபதி, பெண் நீதியரசர் மற்றும் பெண் அட்டனி ஜெனரல் ஒருவர் ஆகியோரையும் இலங்கை கண்டுள்ளது. இந்த நிலையை கருத்தில் கொள்ளும் போது தென்னாசிய நாடொன்றாகிய இலங்கையில் பெண்களின் பொதுத் துறைக்கான பங்களிப்பு மிக அதிகமாக இருக்கும் என பொதுவாக எதிர்பார்க்கப்படுவது இயல்பே. ஆனால் இந்த நிலை அதியுயர் பொதுத் துறை அமைப்பாகிய நமது பாராளுமன்றத்தில் பிரதிபலிக்கவில்லை. பாராளுமன்றத்தில் உள்ள மொத்த உறுப்பினர்கள் 225 பேரில் 13 பேர் மட்டுமே பெண்கள் ஆவர். இது உறுப்பினர் வீதாசார அடிப்படையில் வெறும் 5.8% ஆகும். இதே வேளை, பாகிஸ்தான், பங்களாதே~;  இந்தியா  மற்றும் மாலைத்தீவு ஆகிய சார்க் நாடுகளின் பாராளுமன்றங்களின் பெண் பிரதிநிதித்துவம் இலங்கையை விட அதிகமாகவே காணப்படுகின்றன. பாராளுமன்றங்கள் சங்கம்  உலக அடிப்படையில் 188 நாடுகளில் இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தரப்படுத்தலில் இலங்கை 130 வது இடத்திலேயே உள்ளது.   இந்த நிலை கவலை தருவதாக நீங்கள் எண்ணினால், பாராளுமன்ற செயற்பாடுகளை பற்றிய பகுப்பாய்வொன்றை மேற்கொண்டு வரும் Manthri.lk என்ற முன்னெடுப்பு தரும் மேலதிக தகவல்கள் நிலைமை இதை விட மோசமாக இருப்பது உறுதி செய்வதை காணலாம். இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாட்டை பகுப்பாய்வு செய்துவரும் Manthri.lk 2012 மே முதல் 2013 ஆகஸ்டு  வரையான நமது பாராளுமன்றத்தின் பெண் உறுப்பினர்களின் பங்களிப்பு வெறும் 2.4% ஆக இருந்தமையை கண்டுபிடித்துள்ளது. அதாவது பெண்களின் பிரதிநிதித்துவம் மட்டுமின்றி அவர்களுடைய செயற்பாட்டு ஆர்வமும் பாராட்டும் வீதத்தில் இல்லை என்பதனையே இது உறுதி செய்கின்றது. இப்பங்களிப்பு ஆண் உறுப்பினர்களின் பங்களிப்பை விட பாதியே ஆகும்!  


இதே வேளை எதிர்க்கட்சியில் உள்ள 5 பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்பு, ஆளும் கட்சி பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்பை விட மிக அதிகமாகும் என்பதும் ஆய்வுகளின் போது புலனாகியது. ஆனால், எதிர்கட்சி மற்றும் ஆளும் கட்சி இரு சாராரிலும் உள்ள பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்பை நோக்கும் போது பெண் உறுப்பினர்களின் ஒட்டுமொத்த பங்களிப்பு 40% விதமாக இருப்பதும் தென்பட்டது. (இது ஆண் உறுப்பினர்களின் பங்களிப்பை விட 60% குறைவாகும்). ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களில் 3 பெண் உறுப்பினர்கள், எரிபொருள் மற்றும் எரிசக்தி அமைச்சு, பாராளுமன்ற விவகார அமைச்சு மற்றும் நீர்பாசன மற்றும் வடிகால் அமைச்சு ஆகிய அமைச்சுக்களின் அமைச்சர் மட்ட உறுப்பினர்களாக இருக்கும் நிலையிலேயே இந்தளவு மோசமான ஆளும் கட்சி பெண் உறுப்பினர் பங்களிப்பு பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  இதே வேளை, சராசரி கணிப்பீடுகள் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் பல முரண்பாடுகளை மறைப்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். சில பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிக செயல் திறமையுடன் இயங்குகின்றனர்: எதிர் கட்சி மற்றும் ஆளும் கட்சி என்ற இரு சாராரையும் எடுத்துக் கொண்டால் அதி கூடிய மற்றும் அதி குறைந்த பங்களிப்பு அம்சங்கள் இடையே பாரிய இடைவெளி இருப்பதும் புலனாகியது. இரு சாராரிலும் அதி கூடிய பங்களிப்பானது, அதி குறைந்த பங்களிப்பை விட 6 மடங்கு அதிகமாக இருந்தமை தென்பட்டது. அதே வேளை அது குறிப்பிட்ட அக்குழுவின் சராசரியை விட இரு மடங்காகவும் காணப்பட்டது. 

எவ்வாறிருந்த போதிலும், எதிர்கட்சி மற்றும் ஆளும் கட்சியை சேர்ந்த எந்தவொரு பெண் பாராளுமன்ற உறுப்பினரும் பாராட்டு பெரும் விதத்தில் செயற்படல்லை என்பதையே மேற்படி தரவுகள் இறுதியாக ஊர்ஜிதம் செய்கின்றன. அதாவது எதிர்கட்சி மற்றும் ஆளும் கட்சி என்ற இரு தரப்பினரிலும் அதி கூடிய பங்களிப்பை பார்க்கும் போது அது அந்த இரு தரப்பிலும் உள்ள ஆண் உறுப்பினர்களின் சராசரி பங்களிப்பை விட மிகக் குறைவாகவே காணப்பட்டது.  படிப்பினை: இலங்கை பாராளுமன்றத்தின் பெண் உறுப்பினர்கள் இன்னும் அதிக ஆர்வத்தை தமது செயற்பாட்டில் காட்ட வேண்டும்.  

 


comments powered by Disqus