பொது மனு – பாராளுமன்றத்தின் மறக்கப்பட்ட கருவி

by Manthri.lk - Research Team posted about 11 years ago in ஆய்வறிக்கை

 

பொது மனு – பாராளுமன்றத்தின் மறக்கப்பட்ட  கருவி
-அசோக்க ஒபேசேக்கர

பாராளுமன்றத்திற்கு மனு சமர்ப்பிப்பது  பிரித்தானிய பாராளுமன்ற முறைமையிலிருந்து பின்பற்றப்பட்டு  நீண்ட காலமாக நிலவி வரும் ஒரு ஜனநாயக வழி முறையாகும். முன்னாள் பாராளுமன்ற செயலாளர் நாயகம்  திருமதி  பிரியாணி விஜயசேக்கரவின் கூற்றுப்படி, 

“அரசாங்க நிர்வாக இயந்திரத்தில் நிலவும் குறைகளை பாராளுமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்து தாம் அனுபவிக்கும் துன்பங்களுக்கு நிவாரணம் நாடுவதற்கு பிரசை ஒருவருக்கு பொது மனு உதவுகிறது.  எந்த விடயங்களின்மீது மனுக்கள் சமர்ப்பிக்கப்படலாம் என்பதற்கு வரையறை எதுவும் கிடையாது, சமர்ப்பிக்கப்படும் மனுக்களின் எண்ணிக்கைக்கும் வரையறையெதுவும் கிடையாது”

பிரயை ஒருவரின் சார்பில் பா.உ. ஒருவர் மனு ஒன்றை சமர்ப்பித்ததும் அது பொது மனுக்கள் குழுவின் பரிசீலனைக்காக  அக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்படும்;. (அதற்கு) நிவாரணம் வழங்குவதற்கு இக்குழுவிற்கு பரந்தளவிளான அதிகாரங்கள் உண்டு என்பதோடு, அவ்வாறு நிவாரணம் வழங்குவதற்கு முன்னர் (சம்பந்தப்பட்ட) அரசாங்க அதிகாரிகளையும்  நிறுவனங்களையும்  (அழைத்து) விசாரிக்கவும் அவர்களிடமிருந்து தகவல்களைப் பெற்றுக் கொள்ளவும் அதற்கு முடியும். 

அந்த வகையில் அதிகாரம்கொண்ட  பிரயைகள் மட்டற்ற விடயங்களில் தமது பிரச்சனைகளுக்கு நிவாரணம் நாடக்கூடிய ஜனநாயமொன்றில்,  அது ஒரு சக்தி மிக்க கருவியாகத் திகழலாம்.    

எனினும,; ஒரு முன்னோடி பாராளுமன்ற மேற்பார்வை இணையத்தளமாகிய Manthri.lk இனால் வழங்கப்படும் மனுச்செய்யும் தரவுகளைப் பார்க்குமிடத்து, மிகக் குறைந்தளவிளான மனுக்களே  பயன்படுத்தப்படுவது  தெளிவாகிறது.

மனுக்கள்மீதான பா.உ.களின் செயலாற்றுகை (மே 12- ஏப். 12) 



 2012 மே 1ஆம் திகதி முதல் 2013 ஏப்றில் 13 ஆம் திகதி வரையான வருடத்தில் 26% மான பா.உ.களே  (225 பா.உ.களுள் 59 பேர் மட்டுமே)  பாரளுமன்றத்திற்கு  மனு சமர்பிப்பதற்கு  (மக்களுக்கு)  உதவும் தமது  விஷேட உரிமையைப் பயன்படுத்தியுள்ளனர்.  மேலேயுள்ள வரைபடத்தில்  காட்டப்பட்டவாறு,  ஆளும் ஐமசுமு கூட்;டமைப்பில்  45 பா.உ.கள்  (28%)  மனுக்கள்  சமர்ப்பித்துள்ளனர். பிரதான எதிர் கட்சியான  ஐதேக யில் 8  பா.உ.கள்  மட்டுமே  (18%)  மனுக்கள் சமர்ப்பித்திருந்தனர்.   

மனுக்களின் மொத்த எண்ணிக்கை மே 12- ஏப் 13



உண்மையில,; சமர்ப்பிக்கப்பட்ட 293 மனு;க்களில் 219 மனுக்கள் ஐமசுமு பா.உ.களினால்  சமர்ப்பி;கப்பட்டன. இது மொத்த மனுக்களில் 75% மாகும். இது, இக்கூட்டமைப்பு கொண்டிருக்கும் 72%  பாராளுமன்ற ஆசனங்களுக்கு  அமைவானதாகும். ஐதேக பா.உ.கள் 59 மனுக்கள் சமர்ப்பித்தனர். மொத்த மனுக்களுள் 20% மாக அமையும் இது அக் கட்சி கொண்டிருக்கும் 20%  ஆசனங்களுக்கு சமமாக அமைகிறது. 

எனினும், பா.உ.களினால் சமர்ப்பிக்கப்பட்ட  மனுக்களின் எண்ணிக்கை அக் கட்சிகளின் பிரதிநிதித்துவத்தின் விகிதாசாரத்திற்கு ஓரளவு சமமானதாகவிருப்பினும், அவற்றின் அதி சிறந்த செயலாற்றுகையை எடுத்துக்காட்டுதாக இல்லை. தரவுகளை சிறிது உன்னிப்பாக அவதானிக்கும்போது, தேசிய மொழிகள் மற்றும் ச%க ஒருங்கிணைப்பு அமைச்சர் கௌரவ வாசுதேவ நாணயக்கார பிரசைகனின் சார்பில் மனுக்கள் சமர்ப்பிப்பதில் ஏனைய பா.உ.களைவிட முன்னிலை வகிப்பது புலனாகிறது. சம்பந்தப்பட்ட  ஆண்டில் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து மனுக்களினதும் 36% மாக அமையும் 105 மனுக்களை அவர் சமர்ப்பித்திருந்தார். 

கௌரவ வாசுதேவ நாணயக்கார அவர்களின் செயலாற்றுகையானது, “ஏன் அவரால் மட்டும் இதைச் சொய்ய முடியும்?”  என்ற கேள்வியை எழுப்புகிறது. துரதிஸ்டவசமாக, மனுக்கள் சமர்ப்பிக்கும் உரிமை ஏன் பா.உ.களால் இவ்வளவு குறைவாக பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு திட்டவட்டமாக விடை கூற முடியாது. இதற்கான ஒரு காரணம் மனுச் சமர்ப்பிக்கும் முறைமையை (நிலையில் கட்டளை 25அ) பா.உ.கள் அறியாமலிருப்பதாக இருக்கலாம். அத்துடன்  பொது மனுக்கள் தமது நிவாரணத்துக்கான ஒரு பொறிமுறையாகவிருப்பதை பொது மக்கள் அறியாமலிருப்பதாகவிருக்கலாம். இந்த தகவல் இடைவெளியை நிரப்புவதும் மனுதாரர்களுக்கு பதிலளிக்கும் வினைத்திறன் மிக்கதொரு முறைமையும் மனுச் செய்யும் முறைமையின் பெறுமதி தொடர்பாக கட்சிகளிடையேயான பொதுக் கருத்தொருமைப்பாடும் இலங்கை குடிமக்களுக்கு மேலும் சிறப்பாகச் சென்றடையக்கூடிய ஜனநாயக ஆட்சி முறையொன்றை வழங்குவதற்கான முக்கிய முன்னெடுப்பொன்றை வழங்கும். 

மனு  ஒன்றை எவ்வாறு சமர்ப்பிக்கலாம் என்பது தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், தயவுசெய்து உங்களுடைய பா.உ.களுள் ஒருவரோடு தொடர்பு கொள்ளுங்கள் Manthri.lk  எனும்  இணையத் தளத்தில் அவர்களுடைய விபரம் அடங்கிய பக்கத்;தில் தொடர்பு கொள்வதற்கான விபரங்கள் உள்ளன). உங்களுடைய பா.உ.வின் தொடர்பு விபரங்கள் உங்களுக்கு கிடைக்காவிடில், தயவு செய்து  [email protected] விற்கு மின்னஞ்சல் செய்யுங்கள். நாங்கள் உங்களுக்கு உதவுவதற்கு மகிழ்ச்சியோடு காத்திருக்கிறோம்.  

 


comments powered by Disqus