பாராளுமன்றத்தில் இருப்பவர்களுள் 20% மானோர் பரம்பரை செல்வாக்கிலிருந்து பயனடைகின்றனர் ; இந் நிலை வளர்ந்து கொண்டே இருக்கிறது.
by manthri.lk - Research Team posted about 10 years ago in ஆய்வறிக்கை
ஒரு அரசியல்வாதி தெரிவு செய்யப்படுவதற்கு அவருக்கு உதவுவது யாது, அவர் ஒரு பாரம்பரிய குடும்பத்தைச் சார்ந்தவராக இருப்பது எவ்வளவு முக்கியத்துவமானது: அதாவது குடும்ப உறுப்பினர் ஒருவர் அல்லது ஒரு நெருங்கிய உறவினர் ஏற்கெனவே தேசிய அல்லது மாகாண
உள்ளுர் அரசியல் பதவி ஒன்றை வகிக்கும் போது?
பாராளுமன்றத்தினதும் அதன் உறுப்பினர்களதும் அனைத்து செயற்பாடுகளையும்
கண்காணித்து தரவரிசைப்படுத்துகின்ற ஒரு முன்னோடி இணைய வழி மேடையாகிய manthri.lk இன் பகுப்பாய்வு இலங்கைப் பாராளுமன்றத்தில் பரம்பரைச் செல்வாக்கு அதிகரிக்கக்கூடும் என்று எடுத்துக் காட்டுகிறது. இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்களுள் 20% மானோர் ஏதோ ஒரு அரசியல் குடும்பத்தோடு தொடர்பு பட்டவர்களாக உள்ளனர்.
புதிய பா.உறுப்பினர்கள் மற்றவர்களை விட அதிகமாக பரம்பரைச் செல்வாக்கு உள்ளவர்களாக விளங்குகின்றனர். - இந் நிலை தொடர்ந்த வண்ணம் உள்ளது: குறைந்தது 20% மான பாராளுமன்ற உறுப்பினர்களாவது
பரம்பரை செல்வாக்கில் பயனடைபவர்களாக உள்ளனர். எனினும், புதிய பா.உ க்களின் மத்தியில் (முதல் தடவையாக பாராளுமன்றத்திற்கு பிரவேசித்தவர்களுள்) இந் நிலை இதை விட மிக அதிகமாக உள்ளது. புதிய பா.உ க்களின் மத்தியில் இது 23% மாகவும் திரும்பவும் தெரிவு செய்யப்பட்டவர்கள் மத்தியில் இது 18%மாகவும் உள்ளது.
ஐதேமு தான் மிகவும் அதிகளவு பரம்பரைச் செல்வாக்கு மிக்கதாய் உள்ளது. எனினும் ஐமசுகூ உம் இந் நிலையில் அதிகரித்துச் செல்கிறது: ஐதேமு தான் மீண்டும் தெரிவு செய்யப்பட்டவர்களும் (33%) புதிய உறுப்பினர்களுமாக (28%) பரம்பரைச் செல்வாக்கு மிக்க பா.உ க்களின் மிக அதிக அளவு வீதாசாரத்தைக் கொண்டுள்ளது. எனினும், அதன் எண்ணிக்கை காட்டுவது போல் இங்கு அந் நிலை குறைந்து வருகிறது. ஐமசுகூ இல் இந் நிலையில் அதிகரிப்பைக் காட்டுகிறது. மீண்டும் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுள் 16% மானவர்களே பரம்பரைச் செல்வாக்கு மிக்கவர்களாக இருக்கும்போதுää அதன் புதிய பா.உ க்களுள் 23% ற்கு மேற்பட்டோர் பரம்பரைச் செல்வாக்கில் பயனடைபவர்களாக உள்ளனர் (காட்சிப்படுத்தல் 1).
கடந்த தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட புதிய உறுப்பினர்களின்; பரம்பரைச் செல்வாக்கில் ஐதேமு தான் மிக அதிகமான மாற்றத்தைக் கண்டுள்ளது. அக் கட்சியில் மீண்டும் தெரிவு செய்யப்பட்ட பா.உ க்களுள் 16.7% மானோர் பரம்பரைச் செல்வாக்கு மிக்கவர்களாக இருக்கும் போது, புதிதாக தெரிவுசெய்யப்பட்ட பா.உ க்களில் ஒருவரும் பரம்பரைச் செல்வாக்கு கொண்டவராக இல்லை.
தேசியப் பட்டியல் பரம்பரை செல்வாக்கை குறைக்க உதவுகிறது: புதிய தேசியப் பட்டியல் பா.உ க்களுள் 8% மானோர் மட்டுமே பரம்பரைச் செல்வாக்கு
மிக்கவர்களாவர். எனினும், மாவட்ட பட்டியல் புதிய உறுப்பினர்கள் மத்தியில்
அது மும் மடங்குக்கு மேலாகி
26% ஐ எட்டுகிறது (காட்சிப்படுத்தல் 2).
பரம்பரைச் செல்வாக்கில் பயனடையும் பா.உ க்களின் எண்ணிக்கையில் ஏற்படும் இந்த அதிகரிப்பு எதிர்காலத்தில் ஏற்பட
இருப்பவற்றிற்கான ஒரு
அறிகுறியா? பாராளுமன்ற ஜனநாயகத்தின் மீது அது கொண்டிருக்கும் தாக்கம் யாது? உங்களுடைய எண்ணங்களை எங்களுடன் www.manthri.lk/en/blog; இல் அல்லது manthri.lk
hotline; 071-4639882. இன் மூலம்
பகிர்ந்து கொள்ளுங்கள்.
comments powered by Disqus