நம்மை பற்றி…

 

Manthri.lk எனப்படுவது பாராளுமன்றத்தில் இருக்கும் 225 உறுப்பினர்களின் செயற்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் பற்றிய செய்திகளை மூன்று மொழிகளில் வழங்கவுள்ளதொரு முன்னோடி இணையத்தளமாகும். இது போன்றதொரு முன்னெடுப்பு இலங்கையில் மேற்கொள்ளப்படும் முதல் தடவை இதுவாவதோடு, பாராளுமன்றத்திற்கு செல்லும் வாய்ப்புப் பெற்ற மக்கள் பிரதிநிதிகள் அவர்களுக்கு வாக்களித்த பொது மக்கள் மீதுள்ள அவர்களது கடமையை எந்தளவு சிறப்பாக நிறைவேற்றுகின்றார்கள் என்பதை அவதானித்து அவர்களுக்கு மதிப்பெண்களை வழங்கும் ஒரு பொறிமுறையாக செயற்படும். வெளிப்படைத் தன்மை, நல்லாட்சி போன்ற அம்சங்களை ஊக்குவித்து நம் நாட்டின் ஜனநாயக செயற்பாடுகள் உயர்ந்ததொரு தளத்ததை அடைய பங்களிப்பு செய்வது Manthri.lk முன்னெடுப்பின் ஒரு முக்கிய குறிக்கோளாகும்.

பயன்திறன் மிக்க விதத்தில் பாராளுமன்ற நேரத்தை செலவிடுதல், வெளிநாட்டு கொள்கை தொடர்பான செயற்பாடுகள், பொருளாதார அபிவிருத்தி, மனித உரிமை, நல்லிணக்கம் உட்பட்ட 42 அம்சங்களை உட்படுத்தும் Manthri.lk முன்னேடுப்பு, பரிப+ரணமானதொரு கட்டமைப்பின் கீழ் பக்கசார்பின்றி செயற்பட்டவாறு பாபராளுன்ற உறுப்பினர்களுடைய செயற்பாடுகளை மதிப்பீடு செய்தவண்ணம் தரப்படுத்தல்களை வழங்க திட்டமிட்டுள்ளது. இதற்குத் தேவையான தகவல்களை பாராளுமன்ற வர்த்தமாணி அறிவிப்புகள், சபையில் மேற்கொள்ளப்படும் உறையாடல்கள் போன்றவையை அடிப்பiடையாகக் கொண்டு தொகுக்கப்படவுள்ளன. அதன் பின் அத்தகவல்கள் வகைப்படுத்தப்பட்டு தகவல் கட்டமைப்பிற்கு உட்படுத்தப்படும். பயனுள்ள நோக்கங்களுக்கான செற்றிறனுடன் பாராளமன்ற நேரத்தை செலவிடுவதன் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்பு அவாதானிக்கப்பட்டு அவர்களுக்கு மதிப்பெண்கள் தரப்படவுள்ளன. (தயவு செய்து FAQ பகுதியை பார்க்க)

பாராளுமன்றச் செயற்பாடுகள் ஊடாக நாட்டிட்கு பயன்மிக்க பங்களிப்பை தரும் மக்கள் பிரதிநிதிகளுக்கு பாராட்டுக்களை வழங்குவதோடு, அம்மேலான அவையின் செயற்பாடுகளுக்கு இடைய+று ஏற்படும் விதத்தல் மற்றும் அதன் கொளரவத்திற்கு பங்கம் விளைவிக்கும் விதத்தில் நடப்பவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதும் Manthri.lk மற்றுமொரு இலக்காகும். கடந்த சில காலமாக பொது மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வரும் ஒரு விடயமாகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையின் அமைதியை சீர்குலைக்கும் விதத்தில் அடாவடியாக நடந்து கொள்வது தொடர்பான உறையாடல்களை மக்கள் மத்தியில் ஊக்குவித்து அது போன்ற முறைகேடுகளை இதன் மூலமாக இல்லாதொழிப்பதற்கான சூழலை உருவாக்க பங்களிப்பு செய்வது நம்முடைய அபிலாஷையாகும்.

இது தவிர, சகல பாராளுமன்ற உறுப்பினர்களுடைய தனி நபர் சிறப்புக் குறிப்புகளையும் வழங்கவும் Manthri.lk திட்டமிட்டுள்ளது. இதில் அவ்வுறுப்பினர்களுடைய கல்வி, சமூகப்பொருளாதார பின்னணி மற்றும் அவர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டிய விதங்கள் போன்றவற்றை தரவும் நாம் எண்ணியுள்ளோம். தாம் பாராளுமன்றம் அனுப்பி வைத்துள்ள தமது பிரதிநிதிகளை பற்றி வாக்காளப் பெருமக்கள் நன்கு அறிந்து கொள்ள வழி செய்வதுதம்; எந்த தடையும் இன்றி அவர்களை சந்தித்து தம்முடைய குறைபாடுகளை தெரிவிக்க பொது மக்களுக்கு வழிவகுப்பதும் இதன் உயரிய குறிக்கோளாகும்.

Manthri.lk இணையத்தயளம் கொழும்பை ஸ்தலமாகக் கொண்டு இயங்கி வரும் அறிவுஜீவிகள் குழுமமொன்றாகிய வெரிடே ரிசேர்ச் ஆய்வு அமைப்பின் ஒரு உருவாக்கம் ஆகும். பொருளாதார, அரசியல், சட்டத்துறை, ஊடகம் போன்ற அம்சங்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வரும் வெரிடே ரிசேர்ச் அமைப்பின் Manthri.lk முன்னெடுப்பிற்காக இணையத்தள மேம்பாடு உட்பட்ட பல்வேறுபட்ட துறைசார் செயற்பாடகளில் ஈடுபட்டு வரும் சர்வதேச புகழ்பெற்ற ஸாபேரியன் அமைப்பின் ஒத்துழைப்பையும் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.



தொடர்புகளுக்கு

தொலைபேசி இலக்கம் - 071-4639-882

மின்னஞ்சல் - [email protected]